Sunday, September 14, 2008

வரவுச்செலவு

அவளுக்கு செலவு , விழியோர‌ப் பார்வை.
எனக்கோ, புன்னகையுடன் சில நிமிடங்கள்.

அவளுக்கு செலவு, மெல்லிதாய் ஓர் புன்னகை.
எனக்கோ, கழிய மறுத்த ஓர் மணி நேரம்.

அவளுக்கு செலவு,என் பக்கத்து இருக்கைஅமர்வு,
எனக்கோ, வார்த்தைகள் வர மறுத்த ஓர் பொழுது.

அவளுக்கு செலவு, சிலிர்ப்பூட்டும் ஒரு விரல் தீண்டல்,
எனக்கோ, மனதில் சுனாமியுடன் ஓர் நாள்.

அவளுக்கு செலவு, சிலமணி நேர தொலைபேசி பேச்சு,
எனக்கோ, அரைமாத சம்பளம்.

கடைசியாய்...,

அவளுக்கு செலவு, ஓர் தொலைபேசி அழைப்பு.

இதில் மட்டும்தானடி பெண்ணே, எனக்கு வரவு.
தாடியும், கவிதையும்.


----‍தியாகராஜன்