நிலா:
தான் வாங்கிய கடனில்,பூமிக்கு கொஞ்சம்
பிச்சை போடும் வள்ளல்.
பெண்:
அழகும்,பயங்கரவாதமும் சேர்ந்த அசையும் காஷ்மீர்.
பணம்:
இருக்கும்வரை தேடி,
இறக்கும்போது விட்டு செல்வது
Sunday, November 16, 2008
Sunday, September 14, 2008
வரவுச்செலவு
அவளுக்கு செலவு , விழியோரப் பார்வை.
எனக்கோ, புன்னகையுடன் சில நிமிடங்கள்.
அவளுக்கு செலவு, மெல்லிதாய் ஓர் புன்னகை.
எனக்கோ, கழிய மறுத்த ஓர் மணி நேரம்.
அவளுக்கு செலவு,என் பக்கத்து இருக்கைஅமர்வு,
எனக்கோ, வார்த்தைகள் வர மறுத்த ஓர் பொழுது.
அவளுக்கு செலவு, சிலிர்ப்பூட்டும் ஒரு விரல் தீண்டல்,
எனக்கோ, மனதில் சுனாமியுடன் ஓர் நாள்.
அவளுக்கு செலவு, சிலமணி நேர தொலைபேசி பேச்சு,
எனக்கோ, அரைமாத சம்பளம்.
கடைசியாய்...,
அவளுக்கு செலவு, ஓர் தொலைபேசி அழைப்பு.
இதில் மட்டும்தானடி பெண்ணே, எனக்கு வரவு.
தாடியும், கவிதையும்.
----தியாகராஜன்

Monday, October 08, 2007
கண்ணதாசன்..வாலி..வைரமுத்து...வரிசையில்...
கண்ணதாசன்..
வாலி..
வைரமுத்து..
இவர்கள் வரிசையில்
இன்று நான்,
பெண்ணை புரிந்துகொள்ள
முயற்சித்து தோற்றதில்.
-தியாகராஜன்
வாலி..
வைரமுத்து..
இவர்கள் வரிசையில்
இன்று நான்,
பெண்ணை புரிந்துகொள்ள
முயற்சித்து தோற்றதில்.
-தியாகராஜன்
Labels:
kannadasan,
tamil kavithai,
tamil poems,
vaali,
vairamuthu
Saturday, December 30, 2006
புத்தாண்டே வருக!
புத்தாண்டே வருக!
சென்ற வருடம்...
அரிதாரம் பூசாத அரசியல் கேட்டேன்,
அரிதாரம் பூசுவோருக்கும்,அரசியல் சாயம் பூசினாய்.
பகுத்தறிவு வளரக் கேட்டேன்,
சிலையுடைப்பையும் பகுத்தறிவாய் காட்டினாய்.
உலக கொலையாளிகள் ஒழியக் கேட்டேன்,
ஓருவனுக்கு தூக்கும்,
மற்றொருவனுக்கு 'உலக காவலன்' பட்டமும் தந்தாய்.
ஏழைகள் வேண்டுவன கிடைத்தல் கேட்டேன்,
இலவசமாய் எல்லாம் தந்து,
ஏழைகளை பிச்சைக்காரனாக்கினாய்.
காதல் ஓங்க கருணைக் கேட்டேன்,
காமத்தை காதலென திரையில் காட்டினாய்.
போதும்! போதும்!!
நான் கேட்டதும், பெற்றதும்...
நீயே தா! அளவறிந்து தா!
எண்ணெய் வளங்கள் அதிகம் வேண்டாம்,
தீவிரவாதமென அமெரிக்கா போர் தொடுக்கும்.
தமிழ்ப்பற்று அதிகம் வேண்டாம்,
காமகளியாட்ட படங்களுக்கும் 'தூய தமிழில்'
பெயர் வைக்க போராட தோண்றும்
பகுத்தறிவு இருப்பதே போதும்,
கருப்புசட்டை மஞ்சள் துண்டாகும் காலம்
வந்தாலும் வரலாம்.
சகோதர பாசம் அளவோடு போதும்,
அடிக்கடி நெடும்பயணம் போக நான் தயாராயில்லை.
அரசியல் ஆர்வம் அறவே வேண்டாம்,
'நான் திராவிடனா? ஆரியனா?' என்பதில்
'நான் மனிதனா?' என்பது மறந்தே போகும்.
ஆகையால்,புத்தாண்டே,
புத்தாண்டில் நீ எதைக் கொடுத்தாலும், அளவாய் கொடு.

Tuesday, October 03, 2006
Kannadasan Songs with lyrics
Hi,
You can find kannadasan songs with lyrics in the below URL
http://www.tamilnation.org/literature/kannadasan/lyrics.htm
--Thiagan

List of Permitted and prohibited items on Air Travel
Hi,
TSA(Transportation Security Administration) has provided the list of permitted and prohibited items on Air Travel in and outside US.
More information is available in the URL:
http://www.tsa.gov/travelers/airtravel/prohibited/permitted-prohibited-items.shtm

Monday, October 02, 2006
கடவுளும்,பொறியாளனும்...
தலைப்பு: கடவுளும்,பொறியாளனும்...
புனைவு: தியாகராஜன்
வகை : கதை
கைகடிகாரத்தையும்,சாலையின் கோடியையும் மாறி மாறி பார்த்த படியே,தனது நடையின் வேகத்தைக் கூட்டினான் விஸ்வா. இப்போதெல்லாம், காலையில் கம்பெனிப் பேருந்தைப் பிடிப்பதற்குள், போதும், போதும் என்றாகிவிடுகிறது. நாம் எப்போது சில நிமிடங்கள் தாமதமாக வருகிறோமோ,அப்போ க்ரெக்டா டைமுக்கு வந்திடும்.முன்னாடியே வந்து நின்னா,அரை மணி நேரம் லேட்டா வரும்.
'என்ன பண்றது!. இந்தியா என்றாலே அப்படித்தான். எப்படியாவது US போயி செட்டில் ஆயிடனும்' மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஒருவழியாக,அவன் கம்பெனி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.வந்தவுடன், தன்னுடன் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும்
வந்து விட்டார்களா? என்று attendance எடுப்பது அவன் வழக்கம்.
'என்ன! சுமிய இன்னும் காணோம்?'. மனதிற்குள் ஓர் படபடப்பு. நடிகர் வடிவேலு சொல்வது போல், "வாலிப வயசு" இல்லையா?.அப்படித்தான் இருக்கும்.அந்த சுமி என்கிற சிமிதாவிடம் அவன் இதுவரை பேசியது கூட இல்லை. பெயர் கூட ,அவள் கழுத்தில் மாட்டியிருந்த identity cardயை, அவளுக்கே தெரியாமல் பார்த்து தெரிந்து கொண்டது தான்.
'என்ன சுமி! இன்னைக்கு லேட்டா?" என்று அங்கே வந்து நின்ற சுமிதாவை கேட்க ஆசை தான். ஆனால் பக்கத்தில் அப்பா? அவன் அப்பாயில்லை! அவள் அப்பா!'
தன் மகளை கம்பெனி பேருந்து வரை வந்து அனுப்பி வைக்கும் அப்பாக்களிடம் ஒன்று கேட்ட வேண்டும்.யாருக்கு பயம் படுகிறார்கள் என்று. ஒரு வேளை ,அவர்களின் மகள்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையோ. இப்படி பாதுகாப்பாய் அனுப்பிவைக்கப்படும் பாப்பாக்கள் தான், பகல் நேரத்தில் ECR ரோட்டு ரெஸ்டாரண்டுகளில் கூத்தடிக்கும்.
மணி 6.50. இந்நேரம் வந்திருக்க வேண்டும். அதோ வந்து விட்டது.
பேருந்தில் ஏறி காலியாக இருந்த ஒரு இருஇருக்கை seatல்,ஜன்னல்ஓர இருக்கைகு,பக்கத்து சீட்டில் உட்கார்ந்தேன். அதுயென்ன? இருஇருக்கை seat ,ஜன்னலோர இருக்கைக்கு பக்கத்து சீட்டு. அதெல்லாம் ஒரு கணக்கு தான். ஒரு முறை அப்படி உட்கார்ந்து பயணம் செய்து பாருங்கள். அப்போது தெரியும்.
ரொம்ப நாளாவே இந்த seat தான்.கரெக்டா,ஈக்காடுதாங்கல் hyundai showroom கிட்ட ஒரு பொண்ணு ஏறும்.சொல்லி வெச்ச மாதிரி,என் பக்கத்துல வ ந்து உக்காரும். அப்படி ஒரு understanding. சும்மா! டைம் பாஸ் தான்!. மத்த படி ஒண்ணும் இல்லை. இதோ ashok pillar uthayam தியேட்டர் தாண்டி விட்டது பேருந்து.இன்னும் சிறிது தூரத்தில் 'hyundai show room'.
சீப்பை எடுத்து, கொஞ்சமாய் கலை ந்திரு ந்த என் முடியை,இன்னும் கொ ஞ்சம் கலைத்தேன். இப்படி இரு ந்தால் தானே,இப்போ எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்குது.
'can i sit here' என்ற கேட்டபடியே, நான் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், அ ந்த என் 'பிடித்தமான' seatயில் உட்கார் ந்தான் ஒருவன். அவனை இது வரை நான் இ ந் த ரூட்டில் பார்த்த தில்லை.
புதுசா சேர் ந்திருப்பான் போலும்.
அது சரி!, அ ந்த 'show room' party என்ன ஆச்சு!' அதோ அங்கே இருக்கிறாள். பக்கத்தில் இடம் கூட காலியாக இருக்கிறதே!. பேசாமல் அங்கே எழுந்து போய் உட்கார்ந்து விடலாமா? என்று கூட நினைத்தான்."ச்சே! அது நல்லா இருக்காது!" மனதை தேற்றிக்கொண்டான்.
'ஹாய் ! ஐ யம் 'விஷ்ணு'?' நீங்க?'-- குரல் பக்கத்தில் இருந்துத்தான்.
'என்ன இருந்தா உனக்கென்ன?' என்பது போல் பார்த்தேன்.
'ok viswa! இன்னிக்கு நீ என் கூடத் தான் பயணிக்க வேண்டும்.வேணும்னா நாளைல இருந்து அந்த பொண்ணு கூடவே போ! நான் தொந்தரவு செய்ய மாட்டேன்"
விஸ்வாவிற்கு தூக்கி வாரி போட்டது. என் பேரு இவனுக்கு இப்படி தெரியும். அதுவும் அந்த பொண்ணு மேட்டர்?'
'நீ யாரு! என் பெயரெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.'
'நான் யாரா? நான் தான் கடவுள்.'
'டேய்! எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கீங்க.'
'விஸ்வா! நான் சொல்வதை பொறுமையாக கேள். நான் தான் கடவுள்."
"என்ன கடவுளா? ஏற்கனவே 'நான் தான் கடவுள்'ன்னு சொல்லிகிட்டு நெறைய பேர் இருக்காங்க? இப்ப நீ வேறயா?"
'இல்லை! நான் நிஜக் கடவுள். இது தான் உலகம். கல்லையும் ,சிலையையும் கடவுள்னு கும்பிடற உங்க முன்னாடி கடவுளே வ ந்தாலும் நம்ப மாட்டீங்க. ஒன்னு வாய்லேர்ந்து லிங்கம் வர வைக்கணும். இல்லைன்னா 'இராம நாராயணன்' படத்துல வர்ற மாதிரி graphics காட்டணும். அப்பத்தான் நம்புவீங்க"
"'சரி. சரி! இப்ப ஏன் வந்தே!"
"என்னடா இது. திருப்பதிக்கு வந்து கோடி கோடியா உண்டியல்ல போட்டு,என்னை பாக்கறதுக்காக கால் வலிக்க காத்திருக்கிறீங்க. நானே உங்களை வந்து பார்த்தா,'ஏன் வந்தேன்னு கேக்கறீங்க'. கடவுளாகவே இருந்தாலும், இந்த காலத்துல 'பந்தா' பண்ணனும் போல."
"சொல்றதா இருந்தா சொல்லு!. இல்ல ஆள விடு. இன்னிக்கி radio mirchiல hot topic. பெண்கள் jeans அழகா? இல்லை shortsல அழகான்னு topic. mirchi suchi voice. கேக்கலாம்.கேக்கலாம்! கேட்டுகிட்டே இருக்கலாம்."
'ஆமா! நாட்டுக்கு முக்கியமான topic."
" நீயெல்லாம் TV பாக்கறதே இல்லையா? ஒரு பக்கம் பகுத்தறிவு பேசுவோம். ஆனா காலங்காத்தாலே 'ராசிப்பலன்' பார்ப்போம்.
எதிர் கட்சியா இருந்தா, ஊழல்ன்னு சொல்லுவோம். நாமளே பதவிக்கு வந்தப்புறம் 'இது திசைதிருப்பும் முயற்சி'ம்போம். இதெல்லாம் இ ந்தியால சகஜமப்பா?"
பேருந்து அடையாரைத்தாண்டி பெருங்குடியை நெருங்கிக்கொண்டிருந்தது.
"சரி. இவ்ளோ traffic Jam இருக்கே!.அமெரிக்கா மாதிரி எல்லாரும் கார் வச்சிருக்காங்களா?'
"சாமி இந்த கூட்டத்த பார்த்து ஏமாந்திடாதீங்க. எல்லாம் software,BPO கூட்டம். இப்படித்தான், இத காமிச்சுத்தான் பல பேர் 'இந்தியா ஒளிர்கிறது'ன்னு ஓட்டு கேட்டாங்க'.
"அப்ப இந்தியாவில இன்னும் பட்டினி,வறுமை இதெல்லாம் இருக்கா?'
'எலிக்கறி கிடைக்கறவரை பட்டினி இருக்காது.அழகிப்போட்டி இருக்கறவரை ஆடைகளில் வறுமை இருக்கும்.'
'எலிக்கறியா?. இப்பத்தான் ஆளாளுக்கு இலவசமா எல்லாம் தர்றாங்களே'
'ஜனங்களுக்கு தேவை,வேலை தான். இலவசங்கள் இல்லை. இலவசங்கள் கொடுத்து ஜனங்களை பிச்சைக்காரங்களா ஆக்கணுமா?
அது சரி, கடவுள்ங்கற. இதெல்லாம் தெரியாம என்னத்த உலகத்த காக்கற? ஒரு வேளை, ரம்பை, ஊர்வசி ஆட்டத்தயே பார்த்துகிட்டிருப்பே போலிருக்கு'
"நண்பா! பர்சனல் விசயங்கள் வேண்டாமே. நண்பா! நாமென்ன சுற்றுலாவா போறோம். உன் அலுவலகமென்ன,அடுத்த மாநிலத்திலா இருக்கிறது."
"சத்தம் போட்டு சொல்லாதப்பா! உடனே அங்கேயும் ஒரு 'டெவலப்மெண்ட் சென்டர்' ஆரம்பிச்சிட போறாங்க"
"அப்ப தொழில்துறை வளர்ந்திருக்குன்னு சொல்லறதெல்லாம் உண்மைதான் போலிருக்கே."
"எல்லாத் தொழிலும் வளர்ல. கணிப்பொறி சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்ந்திருக்கு. யார் ஆட்சியில இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணிப்பொறித் துறை வளர்ந்து கிட்டுத் தான் இருக்கும். தன்னாலத்தான் கணிப்பொறி புரட்சி நடந்ததுன்னு சொல்றவங்க,விவசாய துறைல தன் திறமையை காட்டி இன்னொரு புரட்சி பண்ணலாமே"
'அது சரி. ஒரு வேளை இந்த கம்பெனி பேருந்த விட்டா,எப்படி அலுவலகம் வருவ?'
'சரியா கேட்டே போ!. மூனு பஸ் மாறி வரணும். வந்து சேர்வதுக்கே பகலாயிடும்."
'ஏன் அரசு பேருந்துகள் உன் அலுவலகம் முன்னாடி நிக்காதா?"
'நிக்கலாம். இவ்ளோ பேர் வேலை பாக்கற கம்பெனிக்காக,ஒரு பஸ் ஸ்டாப் வைக்க கூடாதாயென்ன! எல்லா பஸ்ஸும் நின்னா,டிராவல்ஸ்காரங்களெல்லாம் எப்படி பிழைக்கறது. எல்லா மாலு சாமி மாலு!'
அதற்குள் பேருந்து அந்த மென்பொருள் கம்பெனி வளாகத்தை ஒட்டி நின்றது.
விஸ்வா அவசர அவசரமாக கழுத்தில் அணியும் 'டை'யை எடுத்து அணிந்து கொண்டான். இதை வேடிக்கையாக பார்த்துக்கொண்டே,கடவுள் கேட்டார்.
'என்ன இது.'
'இதுவா? வெள்ளைக்காரங்க குளிர் பிரதேசத்துல கழுத்துல கட்டறது. இங்கே,இந்த சென்னை வெயில்ல,வேர்வை வந்தாலும் கட்டணும்.கட்டலன்னா அபராதம் வேற'.
'பெண்கள் கட்ட தேவையில்லையா? அவங்கல்லாம் கட்டலையே!'
'அதுக்குள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா? அவங்களுக்கு அதெல்லாம் எந்த கட்டுப்பாடும் கிடையாது.அவங்க எத வேணுன்னாலும் போட்டுட்டு வரலாம். யாரும் கேக்க மாட்டாங்க.இதெல்லாம் பெண் சுத ந்திரம்.'
'அப்பன்னா ஆண் சுதந்திரம்??'
'அதுக்கெல்லாம்,இன்னொரு பாரதி வரணும்! சத்தம் போட்டு பேசாத!.
கிண்டல் செய்தேன்னு ஈவ் டீசிங்ல போட்டு லாடம் கட்டிடுவாங்க.'
'ஏன்? என் பக்க நியாத்த நான் சொல்வேனே!"
'உன் பக்க நியாத்த நீ சொல்வே!.ஆனா எவனும் கேக்க மாட்டான்.
இது மட்டுமில்ல!. புருஷன் திட்டினானா,'என் மனதில் உளைச்சலை ஏற்படுத்திவிட்டார்'ன்னு கேஸ் போடலாம். மாமியார்,மாமனார் பிடிக்கலையா? 'வரதட்சணை கேக்கறாங்க'ன்னு கேஸ் போடலாம்.
இப்படி சட்டமே பல விசயத்துல அவங்களுக்கு சாதகமாத் தான் இருக்கு."
"அப்படின்னா! பெண்களெல்லாம் ராட்ஸசியா மாறிட்டாங்களா"
"சேச்சே! அப்படி இல்லை,இப்பவும் தெய்வமா மதிக்கத்தக்க பெண்கள் இருக்கறாங்க. ஆனா எண்ணிக்கைதான் குறைஞ்சுகிட்டு வருது."
எப்படியும் செக்யூரிட்டி ஐடி கார்டு இல்லாததால்,கடவுளை உள்ளே விட மாட்டார்கள் என்று நினைத்தால்,எனக்கு முன்னே என் கணிணி முன்பு உட்கார்ந்திருந்தார் கடவுள்.
'எப்படிய்யா வந்தே?' ஆச்சரியம் மேலிட கேட்டேன்.
'அதெல்லாம் உனக்கெதுக்கு!. வந்துட்டேன் பார்த்தியா?'
'சரி சரி. எனக்கு நிறைய வேலை கிடக்கு. தொந்தரவு பண்ணாமல்,உட்கார்' என்று கூறி விட்டு தனக்கு வ
ந்த மின்னஞ்சல்களை படித்துக் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
"என்ன இது தான் வேலையா?"
"இத பார்த்தா வேலையா தெரியலையா? இங்க எனக்கு மேல பாக்கறவங்கல்லாம் லேட்டாத்தான் வருவாங்க. அவங்க வந்து,மெயில் பார்த்து,போன் பேசிட்டு வர்றதுக்குள்ளே மத்தியாணம் ஆயிடும்.
அதுக்கு மேல எங்களுக்கு வேலை தந்து,அத முடிக்கறதுக்குள்ளே நைட்டாயிடும். இன்னும் எனக்கு கல்யாணம் ஆகாததால எதோ போகுது.கல்யாணம் ஆனாத்தான்,தெரியும்"
"அப்ப இதே வேலைய பாக்கற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமே. அவளுக்கும் உன் வேலையை பத்தி தெரியுமெல்லே"
"இப்படித்தான் என் நண்பன் ஒருத்தன் கல்யாணம் பண்ணினா. அவனுக்கு எப்ப 11 மணி வரைக்கும் வேலை இருக்குமோ,அப்ப அவங்களுக்கு வேலை இருக்காது. சீக்கரமா வீட்டுக்கு வந்திடுவாங்க.
அவங்களுக்கு வேலை இருக்கும் போது,இவன் வீட்டுக்கு சீக்கிரம் போவான். பல நேரம் வீட்ல சமைக்கறதே இல்லை. பிட்சாவும்,பர்கரும் தான்.'
"என்ன இப்படி சொல்ற. நீங்க தான் அதிகம் சம்பளம் வாங்கறீங்களாமே!"
"அப்படித்தான் எல்லாரும் நினைக்கறாங்க.சொல்றாங்க. வேலைல சேரும் போது சொல்லும் சம்பளம் வேறு. கைக்கு கிடைக்கும் சம்பளம் வேறு. இங்க இருக்கற ஒருத்தருக்காவது,இந்த மாதம் எவ்வளவு சம்பளம் கிரெடிட் ஆகும்னு சொல்ல முடியுமா? முடியாது. சம்பளபில்லை பார்த்துத் தான் 'ஒ ஓ இவ்வளவு போட்டிருக்காங்களா'ன்னு தெரிஞ்சுக்க முடியும்.முதலாளித்துவம் உள்ள கம்பெனில இருந்து,சமத்துவம் பேசற கம்பெனி வரைக்கும் இதே நிலைமை தான்'
'அது சரி! நான் கேக்கவே மறந்துட்டேன். நீ எதுக்கு உலகத்துக்கு வந்தே?'
'உங்க ஆளுங்க தப்பு மேல தப்பு செஞ்சுகிட்டே போறாங்க, அங்க இருக்கற எங்களுக்கு, இந்த தப்புக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கறதுன்னே புரியல. இருக்கற தண்டனையெல்லாம்,இவங்க தப்புக்கணக்கைப் பார்க்கும் போது,சிறுசா தோணுது. அதான்,புதுசா என்ன தண்டனை கொடுக்கலாம்னு தெரிஞ்சுக்க வ ந்தேன்.
கண்டு பிடிச்சுட்டேன். அதிக பட்ச தண்டனை,அடுத்த ஜென்மத்தில மென்பொருள் பொறியாளரா பிறக்கணும்.
"அதுக்கு மேலயும் தப்பு பண்ணா?"
"ஆண் மென்பொருள் பொறியாளரா பிறக்கணும்"

Thursday, September 28, 2006
மனகிறுக்கல்கள்-2
தலைப்பு: காலத்தே காதல் செய்
புனைவு: தியாகராஜன்
வகை : கதை
இன்று கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா.
வண்ணமிகு ரங்கோலி வரவேற்பு அறையை நிரப்பியிருந்தது. ஒலிபெருக்கிகள் முழுமூச்சில், "முஸ்தபா... முஸ்தபா"வை காற்றில் கரைத்துக் கொண்டிருந்தது. கோலம் போடும் சாக்கில் சிலர்.கோலம் பார்க்கும் சாக்கில் சிலர். தன் ஆளை இன்று புடவையில் பார்க்க முடியும் என்பதாலேயே கல்லூரிக்கு வந்த சிலர். மும்மரமான கடலை சாகுபடியில் சிலர். இப்படி கல்லூரி வளாகம் முழுதும் கூட்டங்கள். ஆனால் முன்பு இருந்த உற்சாகம் இல்லை அவர்களிடம்.
உதடுகள் சிரித்தாலும் உள்ளங்கள் ஊமையாய்....
இன்று கண் முன்னே இருக்கும் எதுவும், நாளை நமதில்லை.
ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடித்த மணல்மேடு,
வெயிலுக்கு ஒதுங்கிய வேப்பம்பட்டு ஸ்டேஷன் மரங்கள்,
"மடையா! மடையா!!" என்று நம்மை செல்லமாய் கண்டிக்கும் பிரிஸ்சி, எதற்கெடுத்தாலும் "come and meet me later" என்று சொல்லும் maths professor.,
ஒற்றை நோட்டு புத்தகம் வைத்தே, நாலு வருட படிப்பையும் முடித்த "நாய்" selva, காடாய் வளர்ந்திருக்கும் முடியை,ரஜினி ஸ்டைல் என்று தானே நினைத்துக்கொண்டு கோதிவிடும் "காடு" vijay,
எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் "நித்திய கண்ணாலன்",
இவர் அறிவு ஜீவியா? இல்லை பைத்தியகாரரா?" என்று சில நேரம் சிந்திக்க வைத்த திலகர்.
இவர்கள் யாரும்,இவை யாவும், நாளை முதல் அன்னியம். நான்கு வருட வாழ்க்கையை ஒரே நொடியில் மறக்கச் சொல்லும் நிதர்சனம்.
கண்களை முடிக்கொண்டு என் நான்குவருட கல்லூரி வாழ்க்கையை மறுமுறை ஓட்டிப்பார்த்தேன்.
"விஸ்வநாதன்...".
அவள் குரல் கேட்டு கண் திறந்தேன்.
எதிரே அவள்..........
ஆம்! அவளே தான். எந்த பெண்ணின் பெயரை நான் அதிகம் உச்சரித்திருப்பேனோ,எந்த பெண்ணின் பார்வையில் உலக இன்பங்கள் அனைத்தும் ஜனித்ததாக நினைத்தேனோ, அவள்…
சில நேரங்களில் எனக்கேத் தோன்றும்,கடற்கரை மணலின் எண்ணிக்கையை விட, நான் அவளை நினைத்துக் கொண்டிருந்த நிமிடங்கள் அதிகப்பட்டிருக்குமோயென்று.
அவளின் இருக்கை, எனக்கு போதிமரமாய்த் தெரிந்தது.அவள் பெயர் என் password ஆனது.அவள் குப்பைகள் கூட, பொக்கிஷமாய் தெரிந்த நாட்கள் அவைகள்.
அவள் ஒரு முறை எதையோ எழுத வாங்கி,பின் திருப்பித் தந்த பேனாவை,அதன் பிறகு இன்று வரை உபயோகிக்கவில்லை,ஏன் தெரியுமா? அவள் ரேகைகள் அழிந்து விடும் என்பதால்.
இதைப் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள்,பைத்தியக்காரனென்று.
'காதலில் பைத்தியமாய் இருப்பதிலும், ஓர் சுகம் இருக்கத்தானே செய்கிறது'.
'பெண்ணே! வா நீ என்றழைத்தால் வருவாயா நீ! தா நீ என்றால் தருவாயா இதயத்தை!' என்றெல்லாம் திலகரின் field theory வகுப்பில், நான் எழுதிய நோட்டு புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் சொல்லுமடி என் காதலின் ஆழத்தை!.உங்களுக்கு தெரியுமா? அவளை நேசிக்க ஆரம்பித்த பிறகு தான்,என் பெயரையே நேசிக்க ஆரம்பித்தேன். ஆஹா! அவள் உச்சரிப்பில் தான்,என் பெயர் எத்தனை அழகு.
"இப்படியே சொல்லிட்டு இரு! வேற எவனாவது தள்ளிட்டு போகப்போறான்.அப்புறம் என்ன, தாடி தான்,கவிதை தான்... மச்சி! சொல்றத கேளு.உன் காதலை அவகிட்ட சொல்லிடு'
'எப்படிடா? ஒரு வேளை அவள் நட்புன்னு சொல்லிட்டா?'
'டேய்! இவளை எனக்கு பிடிக்கும்கிறது, நட்பு. இவளை மட்டுமே எனக்கு பிடிக்கும்கிறது, காதல். நீ இதுல இரண்டாவது ரகம். சொல்லப்படாத காதல்,வழங்கப்படாத நீதி இரண்டுமே ஆபத்து தான். சொல்லிடு.இதுயென்ன கொலை குற்றமா?'
"கோழை கூட பயத்துல கொலை செய்யலாம். ஆனா தைரியம் இருந்தா தான் காதல சொல்ல முடியும்'
'ஏய்! இது எதோ சினிமா வசனம் மாதிரி இருக்கு!'
'சினிமா வசனமே தான். ஏன் நான் சொல்ல கூடாதா?'
'வசனமென்ன! மரத்த சுத்தி டூயட்டே பாடு. ஆனா 'சேது'வா ஆகாம பாத்துக்க.'
'பொண்ணுங்க psycologyயே இதுதான்டா? காதல அவங்களா சொல்ல மாட்டாங்க? நாமே சொல்லனும்னு நினைப்பாங்க. நாம சொல்லிட்டா,பிடிச்சிருந்தா சரிம்பாங்க,இல்லயா? நட்பா தான் பழகனேன்னு சொல்லிட்டு கட் பண்ணிடுவாங்க'
காதல் என்னை கொல்வதற்கு முன்னால்,அவளை கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதுவரை நாத்திகம் பேசிக்கொண்டிருந்த நான்,என் காதலைச் சொல்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு சென்று, அவள் பெயருக்கு அர்ச்சனை செய்தேன். பிறகு தான் தெரிந்தது, தனக்கே பெண் கிடைக்காமல் தான்,அரசமரத்தடியில் பிள்ளையார் உட்கார்ந்தது.
"மாமு! இனி மேல்,முருகர்,கிருஷ்ணர் கோவிலுக்குத் தான் போகனும்.ஒன்னு இல்லன்னாலும்,இன்னொன்னு கிடைக்குமுல்ல.இவ தான் பிடிக்கலன்னிட்டா? விட்டுட்டு வேற ஆளப் பாரு".
நண்பர்கள் எளிதாக சொன்னார்கள்.
காதலித்தவனுக்குத் தானே தெரியும்,அதன் வலி.
"விஸ்வநாதன்". குரல் கேட்டு நிதர்ச னத்திற்கு வந்தேன்.
"என்ன!" உதடுகள் வார்த்தைகளை ஜனிக்க மறுத்தன. என் காதலை புரிந்துக் கொள்ள முடியாதவள்,எப்படியோ இதைப் புரிந்து கொண்டாள்.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். function முடிஞ்சதும் wait பண்றீங்களா?".
'நான்' எப்படி 'நாங்க' ஆனேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
function முடிந்ததும் அவளுக்காய் காத்திரு ந்தேன். காதலில் தோற்றாலும்,ஜெயித்தாலும்,ஆண்கள் தான் காத்திருக்க வேண்டுமென்பது தான் விதியோ!.
நான் காதலிக்கும் போது காத்திருந்ததிற்கும்,இப்போது காத்திருப்பதிற்கும் எத்தனையோ வித்தியாசங்சள்.
அப்போது கண்ணில் காதல் இருந்தது,கால்களின் வலி தெரியவில்லை.இப்போது கருத்திலும் காதல் இல்லை,யேனோ மனதில் வலி தெரிகிறது.
'விஸ்வா!' நீ என்ன propose பண்ண போது,எனக்கு தெரியல. ஆனா இப்ப பிரியப்போறோம்னு நினைக்கும் போது தான், நானும் உன்னை love பண்றேன்னு புரிஞ்சுகிட்டேன். I love u daa'
மவுணத்தில் சில நிமிடங்கள்.... உதடுகள் தான் ஊனமாய் இருந்ததே தவிர உள்ளங்கள் ஒன்றோடு ஒன்று பேச முயற்சித்துக் கொண்டு தான் இருந்தன.
'விஸ்வா!என்ன...எதுவும் பேச மாட்டேன்ங்கற'.
'என்ன பேச சொல்ற. நான் காதலிக்கும் போது,உனக்கு காதல் வரல. நீ இப்ப காதலிக்கும் போது,என்னிடம் அந்த பழைய காதல் இல்ல. காதல் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல வரணும். நீ காதலிக்கறேங்கறத்துக்காக நான் காதலிக்கறதும், நான் காதலிக்கறேங்கறத்துக்காக உன்னை காதலிக்க சொல்றதும்,காதல் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காதலித்தால்,அது காதல் இல்லை.
இப்போ உனக்கு வந்திருக்கு. எனக்கும் மீண்டும் காதல் வரலாம்.உன் மேலேயே கூட வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைல நாம மீண்டும் சந்திச்சா,அப்ப முடிவு பண்ணலாம். இப்போதைக்கு என்னிடம் காதல் இல்லை. என்னை மன்னித்து விடு.'
என்னடி! பையன் என்ன சொல்றான்! okவா?'
'USல M.S படிக்க seat கிடைச்சிருக்குல்ல,அதான் திமிரா பேசறான். எதோ முன்னமே, என்னை propose பண்ணானே,அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா
U.S ல செட்டில் ஆயிடலாம்னு பார்த்தா,ரொம்பத் தான் பேசிட்டான். நாம அடுத்த ஆளை பார்க்க வேண்டியது தான்.'
அதே நேரம், விஸ்வாவின் மனதில், அவனுடைய பழைய காதல் மெல்ல,மெல்ல மறுஜனனம் எடுக்க முயற்சித்திக்கொண்டிருந்தது.

மனகிறுக்கல்கள்-1
தலைப்பு: பரிசு
புனைவு: தியாகராஜன்
வகை : கவிதை
எப்பரிசு தர,
என்னையே தந்த பின்..
எவைபிடிக்குமென்று கணிக்க,
ஜோதிடன் இல்லை நான்.
அவயங்களை அரிந்து தர,
திரை நாயகன் இல்லை நான்.
வாஸ்து கற்றபிறகே
படைத்திட்டான் போலும் பிரம்மன்.
உன் இதயவாசல் எங்கேயடி இடம்மாற்றி
வைத்தான்.
மின்தூண்டல்விதி கண்ட faraday உம்,உன்
கண்தூண்டல்விதி காண சிரமப்பட்டிருப்பான்.
உன் விழியீர்ப்பை கண்டிருந்தால், நியூட்டன்
புவியீர்ப்பை ஆராயாதே போயிப்பான்.
இதயமாற்றுசிகிச்சை,மருத்துவத்தின்
விந்தையென யார் சொன்னது?
அது காதலின் விந்தை.
அது காதலின் விதை.
இதயம் நிறைத்தாய்,
நினைவுகளால்..
சிந்தை நிறைத்தாய்,
கவிதைகளால்..
இரவை நிறைத்தாய்,
கனவுகளால்..
என் இளமை நிறைத்தாய்,
தீண்டல்களால்..
வாழ்வை நிறைக்க மட்டும் ஏனடி
மறுக்கிறாய் மௌணங்களால்..
பிடித்தவைகளை பட்டியலிடு.
நான் முதலா? கடையா?
முதலென்றால் உன் நிழலாவேன்.
கடையென்றால் வீண் விழலாவேன்.
எப்பரிசு வேண்டுமடி!
நட்புப்பரிசு?
அன்புப்பரிசு?
காதல் பரிசு?
சொல்லடி பெண்ணே!

Tamil Online Radios
| Hi there, | ||
| Pls find some of the Tamil Online Radio stations. Pls make sure that you have a proper media player in your system based on the file extension. | ||
இணையதள வானொலி சுட்டிகளை கீழே காணலாம்.கோப்புகளுக்கு தேவையான ஒளிஒலி இயக்கி உங்கள் | ||
| S.No | Description | Link |
| 1 | Raaga | www.raaga.com |
| 2 | Online Radio | mms://nes.tzo.com:2549/ |
| 3 | Tamil FM | http://listen.to/tamilfm |
| 4 | Merina | http://www.merina.com/Merina.ram |
| 5 | Fun FM | http://www.funfm.4t.com/ |
| 6 | New Internet radio from Denmark webcasting in Tamil & Danish. | Tamil Online Radio |
| 7 | National radio of Tamil elam | Voice of Tigers (VoT Radio) |
| 8 | 24 H Tamil radio from London | IBC Tamil Radio |
| 9 | 24 H Tamil Radio from | Minnal FM |
| 10 | 24 H Tamil radio from | Singapore Oli 96.8 |
| 11 | Earier Radio Canada/ITBC. Broadcasting from | ITR |
| 12 | 24 H Tamil radio from | Thaalam FM |
| 13 | Tamil radio from | London Tamil Radio |
| 14 | 24 H internet radio from | WTR World Tamilar Radio |
| 15 | New Listen to the political discussion programme from National Television of Tamil Eelam | Nilavaram |
| 16 | Tamil radio from U | Merina Alaiyosai |
| 17 | 24 H internet radio. Live broadcast between 18.00-21.00 GMT | Nila FM |
| 18 | 24 H internet radio from | NUM Radio |
| 19 | National radio of | TNS - Tamil National Service |
| 20 | Tamil programme on Spectrum Radio ( 18.00-20.00 GMT. | Gaanakuyil Tamil Broadcast |
| 21 | NEW 24 H live radio from Mauritius in Hindi, Tamil etc. Thaemadura Thamil Osai Tamil programme from New Zealand. | Taal FM |
| 22 | 24 H internet radio | Oli FM |
| 23 | 1 H Tamil-programme from | Radio 3ZZZ |
| 24 | Internet news station. | WTN Tamil Kural |
| 25 | Multicultural programmes in Tamil, Hindi etc. in canada | CMR 101.5 FM |
| 26 | NEW Internet radio from Denmark | Aruvi FM |
| 27 | NEW Internet radio from and | Tamil Hit Radio |
| 28 | NEW Internet radio. | Thayakam Thamil Vanoli |
| 29 | Akilan TT & Tamilterminal online Radio | SBS Tamil |
| 30 | Tamil radio programme from | CRI Tamil service |
| 31 | 24 H internet radio from | Express Tamil Radio |
| 32 | 24 H Tamil radio from | Geethavaani Radio |
| 33 | Tamil radio-programme from | Radio LoRa - Tamil Radio |
| 34 | Tamil News-programme from | BBC Tamilosai |
| 35 | 24 H internet entertainment radio. | Mohankumar's Live Radio |
| 36 | 24 H internet radio. | Thenral World Radio |
| 37 | Radio of | RoI Tamil |
| 38 | Recorded programmes from ATBC Radio from | ATBC |
| 39 | 24 H internet radio. | TMS Live/DJ Baby Boy |
| 40 | Tamil classic songs | Tamil Oldies |
| 41 | Tamil internet programmes | Ulagath Tamil Oasai |
| 42 | Tamil internet programmes. | Maharaji Words of Peace |
| 43 | Religious songs | Keerthanai |
| 44 | 24 H internet music radio | Jeevan Tamil Radio |
| 45 | 24 H internet music radio | Geetham Tamil Radio |
| 46 | 24 H internet music radio. Free registration to listen | Sun Tamil FM Radio |
| 47 | 24 H internet religious music radio. Free registration to listen | Samratchana Devotional |
| 48 | 24 H internet radio for remix music. Free registration to listen | Tamil DJ Mix |
| 49 | 24 H internet music radio. Free registration to listen | Kurinji Malar |
| 50 | 24 H internet music radio. Free registration to listen | Thenisai Tamil FM |
| 51 | 24 H internet music radio. Free registration to listen | Thenisai Oldies Channel |
| 52 | 24 H internet music radio. Free registration to listen | Thenisai Ilayaraja Channel |
| 53 | 24 H internet music radio. Free registration to listen | Thenisai AR Rahman Channel |
| 54 | 24 H internet christian music radio. Free registration to listen | Charismatic Christian Radio |
Subscribe to:
Comments (Atom)