Thursday, September 28, 2006

மனகிறுக்கல்கள்-1

தலைப்பு: பரிசு
புனைவு: தியாகராஜன்
வகை : கவிதை


எப்பரிசு தர,
என்னையே தந்த பின்..

எவைபிடிக்குமென்று கணிக்க,
ஜோதிடன் இல்லை நான்.
அவயங்களை அரிந்து தர,
திரை நாயகன் இல்லை நான்.

வாஸ்து கற்றபிறகே
படைத்திட்டான் போலும் பிரம்மன்.
உன் இதயவாசல் எங்கேயடி இடம்மாற்றி
வைத்தான்.

மின்தூண்டல்விதி கண்ட faraday உம்,உன்
கண்தூண்டல்விதி காண சிரமப்பட்டிருப்பான்.
உன் விழியீர்ப்பை கண்டிருந்தால், நியூட்டன்
புவியீர்ப்பை ஆராயாதே போயிப்பான்.

இதயமாற்றுசிகிச்சை,மருத்துவத்தின்
விந்தையென யார் சொன்னது?
அது காதலின் விந்தை.
அது காதலின் விதை.

இதயம் நிறைத்தாய்,
நினைவுகளால்..
சிந்தை நிறைத்தாய்,
கவிதைகளால்..
இரவை நிறைத்தாய்,
கனவுகளால்..
என் இளமை நிறைத்தாய்,
தீண்டல்களால்..
வாழ்வை நிறைக்க மட்டும் ஏனடி
மறுக்கிறாய் மௌணங்களால்..


பிடித்தவைகளை பட்டியலிடு.
நான் முதலா? கடையா?

முதலென்றால் உன் நிழலாவேன்.
கடையென்றால் வீண் விழலாவேன்.

எப்பரிசு வேண்டுமடி!
நட்புப்பரிசு?
அன்புப்பரிசு?
காதல் பரிசு?

சொல்லடி பெண்ணே!

1 comment:

Sangeeth said...

மின்தூண்டல்விதி கண்ட faraday உம்,உன்
கண்தூண்டல்விதி காண சிரமப்பட்டிருப்பான்.

மிகவும் அருமை நண்பரே!!!