தலைப்பு: கடவுளும்,பொறியாளனும்...
புனைவு: தியாகராஜன்
வகை : கதை
கைகடிகாரத்தையும்,சாலையின் கோடியையும் மாறி மாறி பார்த்த படியே,தனது நடையின் வேகத்தைக் கூட்டினான் விஸ்வா. இப்போதெல்லாம், காலையில் கம்பெனிப் பேருந்தைப் பிடிப்பதற்குள், போதும், போதும் என்றாகிவிடுகிறது. நாம் எப்போது சில நிமிடங்கள் தாமதமாக வருகிறோமோ,அப்போ க்ரெக்டா டைமுக்கு வந்திடும்.முன்னாடியே வந்து நின்னா,அரை மணி நேரம் லேட்டா வரும்.
'என்ன பண்றது!. இந்தியா என்றாலே அப்படித்தான். எப்படியாவது US போயி செட்டில் ஆயிடனும்' மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஒருவழியாக,அவன் கம்பெனி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.வந்தவுடன், தன்னுடன் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும்
வந்து விட்டார்களா? என்று attendance எடுப்பது அவன் வழக்கம்.
'என்ன! சுமிய இன்னும் காணோம்?'. மனதிற்குள் ஓர் படபடப்பு. நடிகர் வடிவேலு சொல்வது போல், "வாலிப வயசு" இல்லையா?.அப்படித்தான் இருக்கும்.அந்த சுமி என்கிற சிமிதாவிடம் அவன் இதுவரை பேசியது கூட இல்லை. பெயர் கூட ,அவள் கழுத்தில் மாட்டியிருந்த identity cardயை, அவளுக்கே தெரியாமல் பார்த்து தெரிந்து கொண்டது தான்.
'என்ன சுமி! இன்னைக்கு லேட்டா?" என்று அங்கே வந்து நின்ற சுமிதாவை கேட்க ஆசை தான். ஆனால் பக்கத்தில் அப்பா? அவன் அப்பாயில்லை! அவள் அப்பா!'
தன் மகளை கம்பெனி பேருந்து வரை வந்து அனுப்பி வைக்கும் அப்பாக்களிடம் ஒன்று கேட்ட வேண்டும்.யாருக்கு பயம் படுகிறார்கள் என்று. ஒரு வேளை ,அவர்களின் மகள்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையோ. இப்படி பாதுகாப்பாய் அனுப்பிவைக்கப்படும் பாப்பாக்கள் தான், பகல் நேரத்தில் ECR ரோட்டு ரெஸ்டாரண்டுகளில் கூத்தடிக்கும்.
மணி 6.50. இந்நேரம் வந்திருக்க வேண்டும். அதோ வந்து விட்டது.
பேருந்தில் ஏறி காலியாக இருந்த ஒரு இருஇருக்கை seatல்,ஜன்னல்ஓர இருக்கைகு,பக்கத்து சீட்டில் உட்கார்ந்தேன். அதுயென்ன? இருஇருக்கை seat ,ஜன்னலோர இருக்கைக்கு பக்கத்து சீட்டு. அதெல்லாம் ஒரு கணக்கு தான். ஒரு முறை அப்படி உட்கார்ந்து பயணம் செய்து பாருங்கள். அப்போது தெரியும்.
ரொம்ப நாளாவே இந்த seat தான்.கரெக்டா,ஈக்காடுதாங்கல் hyundai showroom கிட்ட ஒரு பொண்ணு ஏறும்.சொல்லி வெச்ச மாதிரி,என் பக்கத்துல வ ந்து உக்காரும். அப்படி ஒரு understanding. சும்மா! டைம் பாஸ் தான்!. மத்த படி ஒண்ணும் இல்லை. இதோ ashok pillar uthayam தியேட்டர் தாண்டி விட்டது பேருந்து.இன்னும் சிறிது தூரத்தில் 'hyundai show room'.
சீப்பை எடுத்து, கொஞ்சமாய் கலை ந்திரு ந்த என் முடியை,இன்னும் கொ ஞ்சம் கலைத்தேன். இப்படி இரு ந்தால் தானே,இப்போ எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்குது.
'can i sit here' என்ற கேட்டபடியே, நான் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், அ ந்த என் 'பிடித்தமான' seatயில் உட்கார் ந்தான் ஒருவன். அவனை இது வரை நான் இ ந் த ரூட்டில் பார்த்த தில்லை.
புதுசா சேர் ந்திருப்பான் போலும்.
அது சரி!, அ ந்த 'show room' party என்ன ஆச்சு!' அதோ அங்கே இருக்கிறாள். பக்கத்தில் இடம் கூட காலியாக இருக்கிறதே!. பேசாமல் அங்கே எழுந்து போய் உட்கார்ந்து விடலாமா? என்று கூட நினைத்தான்."ச்சே! அது நல்லா இருக்காது!" மனதை தேற்றிக்கொண்டான்.
'ஹாய் ! ஐ யம் 'விஷ்ணு'?' நீங்க?'-- குரல் பக்கத்தில் இருந்துத்தான்.
'என்ன இருந்தா உனக்கென்ன?' என்பது போல் பார்த்தேன்.
'ok viswa! இன்னிக்கு நீ என் கூடத் தான் பயணிக்க வேண்டும்.வேணும்னா நாளைல இருந்து அந்த பொண்ணு கூடவே போ! நான் தொந்தரவு செய்ய மாட்டேன்"
விஸ்வாவிற்கு தூக்கி வாரி போட்டது. என் பேரு இவனுக்கு இப்படி தெரியும். அதுவும் அந்த பொண்ணு மேட்டர்?'
'நீ யாரு! என் பெயரெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.'
'நான் யாரா? நான் தான் கடவுள்.'
'டேய்! எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கீங்க.'
'விஸ்வா! நான் சொல்வதை பொறுமையாக கேள். நான் தான் கடவுள்."
"என்ன கடவுளா? ஏற்கனவே 'நான் தான் கடவுள்'ன்னு சொல்லிகிட்டு நெறைய பேர் இருக்காங்க? இப்ப நீ வேறயா?"
'இல்லை! நான் நிஜக் கடவுள். இது தான் உலகம். கல்லையும் ,சிலையையும் கடவுள்னு கும்பிடற உங்க முன்னாடி கடவுளே வ ந்தாலும் நம்ப மாட்டீங்க. ஒன்னு வாய்லேர்ந்து லிங்கம் வர வைக்கணும். இல்லைன்னா 'இராம நாராயணன்' படத்துல வர்ற மாதிரி graphics காட்டணும். அப்பத்தான் நம்புவீங்க"
"'சரி. சரி! இப்ப ஏன் வந்தே!"
"என்னடா இது. திருப்பதிக்கு வந்து கோடி கோடியா உண்டியல்ல போட்டு,என்னை பாக்கறதுக்காக கால் வலிக்க காத்திருக்கிறீங்க. நானே உங்களை வந்து பார்த்தா,'ஏன் வந்தேன்னு கேக்கறீங்க'. கடவுளாகவே இருந்தாலும், இந்த காலத்துல 'பந்தா' பண்ணனும் போல."
"சொல்றதா இருந்தா சொல்லு!. இல்ல ஆள விடு. இன்னிக்கி radio mirchiல hot topic. பெண்கள் jeans அழகா? இல்லை shortsல அழகான்னு topic. mirchi suchi voice. கேக்கலாம்.கேக்கலாம்! கேட்டுகிட்டே இருக்கலாம்."
'ஆமா! நாட்டுக்கு முக்கியமான topic."
" நீயெல்லாம் TV பாக்கறதே இல்லையா? ஒரு பக்கம் பகுத்தறிவு பேசுவோம். ஆனா காலங்காத்தாலே 'ராசிப்பலன்' பார்ப்போம்.
எதிர் கட்சியா இருந்தா, ஊழல்ன்னு சொல்லுவோம். நாமளே பதவிக்கு வந்தப்புறம் 'இது திசைதிருப்பும் முயற்சி'ம்போம். இதெல்லாம் இ ந்தியால சகஜமப்பா?"
பேருந்து அடையாரைத்தாண்டி பெருங்குடியை நெருங்கிக்கொண்டிருந்தது.
"சரி. இவ்ளோ traffic Jam இருக்கே!.அமெரிக்கா மாதிரி எல்லாரும் கார் வச்சிருக்காங்களா?'
"சாமி இந்த கூட்டத்த பார்த்து ஏமாந்திடாதீங்க. எல்லாம் software,BPO கூட்டம். இப்படித்தான், இத காமிச்சுத்தான் பல பேர் 'இந்தியா ஒளிர்கிறது'ன்னு ஓட்டு கேட்டாங்க'.
"அப்ப இந்தியாவில இன்னும் பட்டினி,வறுமை இதெல்லாம் இருக்கா?'
'எலிக்கறி கிடைக்கறவரை பட்டினி இருக்காது.அழகிப்போட்டி இருக்கறவரை ஆடைகளில் வறுமை இருக்கும்.'
'எலிக்கறியா?. இப்பத்தான் ஆளாளுக்கு இலவசமா எல்லாம் தர்றாங்களே'
'ஜனங்களுக்கு தேவை,வேலை தான். இலவசங்கள் இல்லை. இலவசங்கள் கொடுத்து ஜனங்களை பிச்சைக்காரங்களா ஆக்கணுமா?
அது சரி, கடவுள்ங்கற. இதெல்லாம் தெரியாம என்னத்த உலகத்த காக்கற? ஒரு வேளை, ரம்பை, ஊர்வசி ஆட்டத்தயே பார்த்துகிட்டிருப்பே போலிருக்கு'
"நண்பா! பர்சனல் விசயங்கள் வேண்டாமே. நண்பா! நாமென்ன சுற்றுலாவா போறோம். உன் அலுவலகமென்ன,அடுத்த மாநிலத்திலா இருக்கிறது."
"சத்தம் போட்டு சொல்லாதப்பா! உடனே அங்கேயும் ஒரு 'டெவலப்மெண்ட் சென்டர்' ஆரம்பிச்சிட போறாங்க"
"அப்ப தொழில்துறை வளர்ந்திருக்குன்னு சொல்லறதெல்லாம் உண்மைதான் போலிருக்கே."
"எல்லாத் தொழிலும் வளர்ல. கணிப்பொறி சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்ந்திருக்கு. யார் ஆட்சியில இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணிப்பொறித் துறை வளர்ந்து கிட்டுத் தான் இருக்கும். தன்னாலத்தான் கணிப்பொறி புரட்சி நடந்ததுன்னு சொல்றவங்க,விவசாய துறைல தன் திறமையை காட்டி இன்னொரு புரட்சி பண்ணலாமே"
'அது சரி. ஒரு வேளை இந்த கம்பெனி பேருந்த விட்டா,எப்படி அலுவலகம் வருவ?'
'சரியா கேட்டே போ!. மூனு பஸ் மாறி வரணும். வந்து சேர்வதுக்கே பகலாயிடும்."
'ஏன் அரசு பேருந்துகள் உன் அலுவலகம் முன்னாடி நிக்காதா?"
'நிக்கலாம். இவ்ளோ பேர் வேலை பாக்கற கம்பெனிக்காக,ஒரு பஸ் ஸ்டாப் வைக்க கூடாதாயென்ன! எல்லா பஸ்ஸும் நின்னா,டிராவல்ஸ்காரங்களெல்லாம் எப்படி பிழைக்கறது. எல்லா மாலு சாமி மாலு!'
அதற்குள் பேருந்து அந்த மென்பொருள் கம்பெனி வளாகத்தை ஒட்டி நின்றது.
விஸ்வா அவசர அவசரமாக கழுத்தில் அணியும் 'டை'யை எடுத்து அணிந்து கொண்டான். இதை வேடிக்கையாக பார்த்துக்கொண்டே,கடவுள் கேட்டார்.
'என்ன இது.'
'இதுவா? வெள்ளைக்காரங்க குளிர் பிரதேசத்துல கழுத்துல கட்டறது. இங்கே,இந்த சென்னை வெயில்ல,வேர்வை வந்தாலும் கட்டணும்.கட்டலன்னா அபராதம் வேற'.
'பெண்கள் கட்ட தேவையில்லையா? அவங்கல்லாம் கட்டலையே!'
'அதுக்குள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா? அவங்களுக்கு அதெல்லாம் எந்த கட்டுப்பாடும் கிடையாது.அவங்க எத வேணுன்னாலும் போட்டுட்டு வரலாம். யாரும் கேக்க மாட்டாங்க.இதெல்லாம் பெண் சுத ந்திரம்.'
'அப்பன்னா ஆண் சுதந்திரம்??'
'அதுக்கெல்லாம்,இன்னொரு பாரதி வரணும்! சத்தம் போட்டு பேசாத!.
கிண்டல் செய்தேன்னு ஈவ் டீசிங்ல போட்டு லாடம் கட்டிடுவாங்க.'
'ஏன்? என் பக்க நியாத்த நான் சொல்வேனே!"
'உன் பக்க நியாத்த நீ சொல்வே!.ஆனா எவனும் கேக்க மாட்டான்.
இது மட்டுமில்ல!. புருஷன் திட்டினானா,'என் மனதில் உளைச்சலை ஏற்படுத்திவிட்டார்'ன்னு கேஸ் போடலாம். மாமியார்,மாமனார் பிடிக்கலையா? 'வரதட்சணை கேக்கறாங்க'ன்னு கேஸ் போடலாம்.
இப்படி சட்டமே பல விசயத்துல அவங்களுக்கு சாதகமாத் தான் இருக்கு."
"அப்படின்னா! பெண்களெல்லாம் ராட்ஸசியா மாறிட்டாங்களா"
"சேச்சே! அப்படி இல்லை,இப்பவும் தெய்வமா மதிக்கத்தக்க பெண்கள் இருக்கறாங்க. ஆனா எண்ணிக்கைதான் குறைஞ்சுகிட்டு வருது."
எப்படியும் செக்யூரிட்டி ஐடி கார்டு இல்லாததால்,கடவுளை உள்ளே விட மாட்டார்கள் என்று நினைத்தால்,எனக்கு முன்னே என் கணிணி முன்பு உட்கார்ந்திருந்தார் கடவுள்.
'எப்படிய்யா வந்தே?' ஆச்சரியம் மேலிட கேட்டேன்.
'அதெல்லாம் உனக்கெதுக்கு!. வந்துட்டேன் பார்த்தியா?'
'சரி சரி. எனக்கு நிறைய வேலை கிடக்கு. தொந்தரவு பண்ணாமல்,உட்கார்' என்று கூறி விட்டு தனக்கு வ
ந்த மின்னஞ்சல்களை படித்துக் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
"என்ன இது தான் வேலையா?"
"இத பார்த்தா வேலையா தெரியலையா? இங்க எனக்கு மேல பாக்கறவங்கல்லாம் லேட்டாத்தான் வருவாங்க. அவங்க வந்து,மெயில் பார்த்து,போன் பேசிட்டு வர்றதுக்குள்ளே மத்தியாணம் ஆயிடும்.
அதுக்கு மேல எங்களுக்கு வேலை தந்து,அத முடிக்கறதுக்குள்ளே நைட்டாயிடும். இன்னும் எனக்கு கல்யாணம் ஆகாததால எதோ போகுது.கல்யாணம் ஆனாத்தான்,தெரியும்"
"அப்ப இதே வேலைய பாக்கற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமே. அவளுக்கும் உன் வேலையை பத்தி தெரியுமெல்லே"
"இப்படித்தான் என் நண்பன் ஒருத்தன் கல்யாணம் பண்ணினா. அவனுக்கு எப்ப 11 மணி வரைக்கும் வேலை இருக்குமோ,அப்ப அவங்களுக்கு வேலை இருக்காது. சீக்கரமா வீட்டுக்கு வந்திடுவாங்க.
அவங்களுக்கு வேலை இருக்கும் போது,இவன் வீட்டுக்கு சீக்கிரம் போவான். பல நேரம் வீட்ல சமைக்கறதே இல்லை. பிட்சாவும்,பர்கரும் தான்.'
"என்ன இப்படி சொல்ற. நீங்க தான் அதிகம் சம்பளம் வாங்கறீங்களாமே!"
"அப்படித்தான் எல்லாரும் நினைக்கறாங்க.சொல்றாங்க. வேலைல சேரும் போது சொல்லும் சம்பளம் வேறு. கைக்கு கிடைக்கும் சம்பளம் வேறு. இங்க இருக்கற ஒருத்தருக்காவது,இந்த மாதம் எவ்வளவு சம்பளம் கிரெடிட் ஆகும்னு சொல்ல முடியுமா? முடியாது. சம்பளபில்லை பார்த்துத் தான் 'ஒ ஓ இவ்வளவு போட்டிருக்காங்களா'ன்னு தெரிஞ்சுக்க முடியும்.முதலாளித்துவம் உள்ள கம்பெனில இருந்து,சமத்துவம் பேசற கம்பெனி வரைக்கும் இதே நிலைமை தான்'
'அது சரி! நான் கேக்கவே மறந்துட்டேன். நீ எதுக்கு உலகத்துக்கு வந்தே?'
'உங்க ஆளுங்க தப்பு மேல தப்பு செஞ்சுகிட்டே போறாங்க, அங்க இருக்கற எங்களுக்கு, இந்த தப்புக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கறதுன்னே புரியல. இருக்கற தண்டனையெல்லாம்,இவங்க தப்புக்கணக்கைப் பார்க்கும் போது,சிறுசா தோணுது. அதான்,புதுசா என்ன தண்டனை கொடுக்கலாம்னு தெரிஞ்சுக்க வ ந்தேன்.
கண்டு பிடிச்சுட்டேன். அதிக பட்ச தண்டனை,அடுத்த ஜென்மத்தில மென்பொருள் பொறியாளரா பிறக்கணும்.
"அதுக்கு மேலயும் தப்பு பண்ணா?"
"ஆண் மென்பொருள் பொறியாளரா பிறக்கணும்"
Monday, October 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Sattre nondhu pona oru aan menporul aayvaalarin sirukadhai.. quite funny..
I always used to wonder- if intelligent aliens with absolutely no idea of human civilisation land in say Chennai for a day tour..what will they think abt us ? (fodder for another short story ?? :)
Humorous and well-written, practical and future-proof. காலக்கண்ணாடியை நன்கு பிரதிபளிக்கிறது. எப்போ படித்தாலும் தகும்.
Post a Comment