அவளுக்கு செலவு , விழியோரப் பார்வை.
எனக்கோ, புன்னகையுடன் சில நிமிடங்கள்.
அவளுக்கு செலவு, மெல்லிதாய் ஓர் புன்னகை.
எனக்கோ, கழிய மறுத்த ஓர் மணி நேரம்.
அவளுக்கு செலவு,என் பக்கத்து இருக்கைஅமர்வு,
எனக்கோ, வார்த்தைகள் வர மறுத்த ஓர் பொழுது.
அவளுக்கு செலவு, சிலிர்ப்பூட்டும் ஒரு விரல் தீண்டல்,
எனக்கோ, மனதில் சுனாமியுடன் ஓர் நாள்.
அவளுக்கு செலவு, சிலமணி நேர தொலைபேசி பேச்சு,
எனக்கோ, அரைமாத சம்பளம்.
கடைசியாய்...,
அவளுக்கு செலவு, ஓர் தொலைபேசி அழைப்பு.
இதில் மட்டும்தானடி பெண்ணே, எனக்கு வரவு.
தாடியும், கவிதையும்.
----தியாகராஜன்
Sunday, September 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Crisp and neat! Enna munanubhavama? :)
really nice, but going get lesson
கல்யாணம் ஆனா எல்லாம் சரியாரும் பாஸ்
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடுங்க பாஸ்
//அவளுக்கு செலவு, ஓர் தொலைபேசி அழைப்பு.//
அழைப்பா? அதுக்கும் மிஸ்டு கால் தானே வந்திருக்கும் :)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment